வாழ்க்கை உன்னை பாடல் வரிகள்

Movie Name
Pulivaal (2014) (புலிவால்)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரைமுறையின்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சத்தோடு வாடிய பெண்ணே
தப்பான திசையென்று தகவல் தரும்
தூரம் கடந்து வந்தால் தானே
ஊரை சேர முடியும்
உயரம் தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரைமுறையின்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சத்தோடு வாடிய பெண்ணே
தப்பான திசையென்று தகவல் தரும்

விதைகள் தம்மை அழிக்காமல்
வேர்கள் என்பது கிடையாது
வியர்வை என்பதை இழக்காமல்
வெற்றி என்பது கிடையாது
தேடி போனது வேறு நீ
தேடி அலைவது வேறு
ஏதோ ஒன்றை அடையும் போது
எதுவோ தொலையும் பாரு
மனிதன் போடும் கணக்கில் எல்லாம்
சரியும் தவறும் உண்டு
காலம் போடும் கணக்கில் எல்லாம்
சரிகள் மட்டுமே உண்டு
உனது கணக்கும் காலக் கணக்கும்
ஒத்துப் போனால் நன்று

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரைமுறையின்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சத்தோடு வாடிய பெண்ணே
தப்பான திசையென்று தகவல் தரும்

நித்தம் குற்றம் புரிகின்றாய்
நினைத்து கூட மகிழ்கின்றாய்
எல்லாக் கண்ணும் தூங்குவதாய்
இன்னோர் குற்றம் இழைக்கின்றாய்
பாவம் என்பது உன் குப்பை
அது நித்தம் சேரும் பாரு
பாவக் குப்பை எல்லாம் கூட்டி
பயிருக்கு உரமாய் போடு
கரும்பு காட்டில் யானை புகுந்தால்
எதுவும் இல்லை மிச்சம்
யானையின் காதில் எறும்பு நுழைந்தால்
அதுவே துயரின் உச்சம்
மடியில் கனமே இல்லையென்றால்
வாழ்வில் ஏது அச்சம்

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரைமுறையின்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சத்தோடு வாடிய பெண்ணே
தப்பான திசையென்று தகவல் தரும்
தூரம் கடந்து வந்தால் தானே
ஊரை சேர முடியும்
உயரம் தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரைமுறையின்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சத்தோடு வாடிய பெண்ணே
தப்பான திசையென்று தகவல் தரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.