பெம்மானே பேருலகின் பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Aayirathil Oruvan (2010) (ஆயிரத்தில் ஒருவன்)
Music
G. V. Prakash Kumar
Year
2010
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே மெய்யுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதி தானோ
புலம் பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீர் இல்லை
கொங்கையிலும் பால் இல்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கலோனே
ஊன்தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உதய்கோனே

வேறாகி ஐம்புலனும் வேராகி
பொன்னுலகம் சேராகிப்போக மாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஓம்……… ஓம்……… ஓம்………

பொன்னார் மேனியனே வெம்புலி தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சு உண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.