செவ்வானம் சின்னப் பெண் பாடல் வரிகள்

Movie Name
Pavithra (1994) (பவித்ரா)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Mano
Lyrics
Vairamuthu
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ

கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்

மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்

நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்

என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

செண்பகப் பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன

தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன

பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன

பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.