உன் விழிகளில் பாடல் வரிகள்

Movie Name
Maan Karate (2014) (மான் கராதே)
Music
Anirudh Ravichander
Year
2014
Singers
Anirudh Ravichander, Shruti Haasan
Lyrics
Vairamuthu
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிபதிற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அளஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு .. ஓஹோஹோ ..

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே அன்பே ..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே அன்பே ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.