சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Arunachalam (1997) (அருணாசலம்)
Music
Deva
Year
1997
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று.. ஹேய்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.