கொஞ்சும் மைனாக்களே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Kandukondain Kandukondain (2000) (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)
அட இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல்
மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே.... கை சேர வா

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனதுக்குள்
தாம் தூம் தீம் (2)

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு
இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும்
என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.