சிங்குச்சா சிங்குச்சா பாடல் வரிகள்

Movie Name
Porkkaalam (1997) (பொற்காலம்)
Music
Deva
Year
1997
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா

புள்ள பொறந்தா அ கண்ண தொறந்தா
தொட்டில் கட்ட முன்னால் வரும் சேலை
பொண்ணு ஒருத்தி அட பூவா சமைஞ்சா
சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேலை
சிங்-சா சிங்குச்சா
சேலை சத்தம் சிங்குச்சா
சேலை பாட்டு சிங்குச்சா
பெண் பார்க்க போகையிலும் சேலைதான் சேலைதான்
கல்யாணம் நிச்சயமா சேலைதான் சேலைதான்
சீர் வரிசை என்றதுமே சேலைதான் சேலைதான்
சீதனத்தில் முதல் வரிசை சேலைதான் சேலைதான்
கல்யாண மேடையில கட்டுவதும் சேலைதான்
கட்டிலுக்கு வேற தினுசு கொட்டுவதும் சேலைதான்
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் …

எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும்
நம் பண்பாட்டுக்கு பேரு சொல்லும் சேலை
சல்வார் கம்மீசு அது எல்லாம் தமாசு
அட சந்தோஷத்த அள்ளி தரும் சேலை
சிங்-சா சிங்குச்சா
கெழவிக்கும் தான் சிங்குச்சா
கொமரிக்கும் தான் சிங்குச்சா
இந்திரா காந்தி கட்டியதும் சேலைதான் சேலைதான்
அம்மனுக்கு சாத்துரதும் சேலைதான் சேலைதான்
வெள்ளைக்காரி இங்க வந்தா சேலைதான் சேலைதான்
வெளிநாட்டிலும் நம்ம பொன்னுக்கும் சேலைதான் சேலைதான்
நாகரிகம் மாறும் போதும் மாறிடாத சேலைதான்
வாழ்க்கையோட கடைசி வரைக்கும் வருவது இந்த சேலைதான்
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
ஹ சிங்குச்சா
ஹ சிங்குச்சா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.