ரோஜாவை தாலாட்டும் பாடல் வரிகள்

Movie Name
Ninaivellam Nithya (1982) (நினைவெல்லாம் நித்யா )
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்...)

பெண்: மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
(மௌனமே...)
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு..ஹூ

ஆண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பெண்: பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்

பெண்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
(வசந்தங்கள்..)

ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
(பூவிலே...)
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ

பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
 
ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்

பெண்: உன் வார்த்தை சங்கீதங்கள்

பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

கோரஸ்: பொன்மேகம் நம் பந்தல்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.