நிலாக் காய்கிறது நிறம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Indira (1995) (இந்திரா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
Hariharan, Harini
Lyrics
Vairamuthu
நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம்
ஏதும் இல்லையே
ஆ…வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும் அந்த
வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்கையே சீதனம் உங்கள் தேவையைத்
தேடுங்கள்

நிலாக் காய்கிறது நிறம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்