தொடத்தொட மலர்வதென்ன பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Indira (1995) (இந்திரா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

(தொடத்தொட)

பனிதனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.