ஆழ்வார்பேட்ட ஆளுடா பாடல் வரிகள்

Movie Name
Vasool Raja MBBS (2004) (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
Music
Bharathwaj
Year
2004
Singers
Kamal Haasan
Lyrics
Vairamuthu

ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனா சல்வார் உள்ளதடா

லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சித் தாவல் இங்கே தர்மமடா ஹோஹோ

ஆழ்வார்பேட்ட ஆழ்வார்பேட்ட
ஆழ்வார்பேட்ட ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா.....

பன்னென்டு வயசில் மனசில்
பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கண்ணப் பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே

கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவுல கிளியோபாட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எது நெஜம் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா
இந்த எழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..(ஆழ்வார்)

பாக்கப் போனா மனுசனுக்கு
பஸ்டு தோல்வி காதல் தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமை எல்லாம்
பஸ்டு காணும் தோல்வி தான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது

டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டுப் போட
ஆளே இல்லையடா ஹா
ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம்
சுத்துல முழுமை காணுமடா

அய்யய்யோ இதுக்கா அழுவுறே
லைஃபுல ஏண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா அத மறந்துட்டு
டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்....(ஆள்வார்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.