சிரிச்சி சிரிச்சி வந்தான் பாடல் வரிகள்

Movie Name
Vasool Raja MBBS (2004) (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
Music
Bharathwaj
Year
2004
Singers
Grace Karunas
Lyrics
Vairamuthu

சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனாதானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்

எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புக்குள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்

வயத்த மட்டும் நிறைச்சிக்கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுக்கொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்

உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா.........(சிரிச்சி)

என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்த்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு

வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளைத் தோலை பாத்துபுட்டா
கடத்த துடிக்குதடா காலு
மங்க்கியில் இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு

ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயும் இல்லயே
வாழ்க்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா.(சிரிச்சி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.