சகலகலா டாக்டர் டாக்டர் பாடல் வரிகள்

Movie Name
Vasool Raja MBBS (2004) (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
Music
Bharathwaj
Year
2004
Singers
Bharathwaj
Lyrics
Vairamuthu

சகலகலா டாக்டர் டாக்டர்
ஜகஜாலம் அறிஞ்ச டாக்டர்
பல வேஷம் போடும் டாக்டர்
பகல் வேஷம் அறியா டாக்டர்
ஆண்கள் மனதை பறித்த டாக்டர்
பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்
இவர்தான் இவர்தான் யமனுக்கும் டாக்டரடா

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவரின் மனசோ வெள்ளை
யோ சொல்லில் கள்ளம் இல்லை
யோ யாரும் பெறுவார் பிள்ளை
யோ இவரு தருவார் பில்லை..ஆ...ஆ..(சகலகலா)

சகலகலா டாக்டர் டாக்டர்
சர்வதேசம் அறிந்த டாக்டர்
தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்
தோள் வலிமை மிகுந்த டாக்டர்
மக்கள் மனதில் டக்கர் டாக்டரடா....

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு உச்சியில் மச்சம்
யோ இவருக்கு பண மழை கொட்டும்
யோ இவருக்கு ரசிகரின் மட்டும்
யோ இவருக்கு நெனச்சது கிட்டும்..ஆ...ஆ..(சகலகலா)

சகலகலா டாக்டர் டாக்டர்
ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்
ஆபரேஷன் அறிந்த டாக்டர்
பரமக்குடியில் பிறந்த டாக்டர்
பாரின் பறந்து படித்த டாக்டர்
பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்
நாடும் ஏடும் போற்றும் டாக்டரடா

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு சித்தா தெரியும்
யோ இவருக்கும் சித்தும் தெரியும்
யோ ஜனங்களின் நாடியும் தெரியும்
யோ பணங்களின் கொடியும் தெரியும்..ஆ..ஆ.(சகலகலா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.