Song lyrics

Sahana Saral Lyrics

சஹானா சாரல் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
2007
Singers
Chinmayi, Udit Narayan
Lyricist
Vairamuthu
Sahana Saral

Video

Sahana Saral

Lyrics

Sahana Saral Lyrics

ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
(இசை)

ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ

பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
(இசை)

பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பெண்: ஹ் ம் ம் ம்
ஆண்: பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

பெண்: ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

ஆண்: சஹானா சாரல் தூவுதோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ

ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
ஆண் பெண் இருவரும்: அடடா
ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ

பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

பெண்: சஹானா
ஆண்: சாரல் தூவுதோ
பெண்: ஓ... ஓ... ஓ...
ஆண்: சஹாரா பூக்கள் பூத்ததோ

பெண்: ஓ... ஓ... ஓ...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people