Kallakapovathu Yaaru Lyrics
கலக்கப் போவது யாரு பாடல் வரிகள்
Last Updated: Jun 01, 2023
கலக்கப் போவது யாரு.......நீதான்
நிலைக்கப் போவது யாரு.......நீதான்
வருந்தி உழைப்பவன் யாரு......நீதான்
வயசைத் தொலைத்தவன் யாரு......நீதான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம்
டாக்டர் வாழ்க ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்.......
எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்
எனது எதிரிகள் சுகம் காண
உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
துயரத்தை எரித்து உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன் (கலக்க)
வழிகளில் நூறு தடை இருந்தால் தான்
வாழ்க்கை ருசியாகும் ஹஹஹஹா
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்
காம்பினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம்
கறப்பேன் அதுதான் சாதனை
சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா
தேன்தான் அது நான்தான்...(கலக்க)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.