Pathukullae Number Lyrics
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு பாடல் வரிகள்
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்
ஏழை என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்
அவன் வேறு யாரு கண்ணாடி பாரு ...
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்
அவள் வேறு யாரு கண்ணாடி பாரு....(பத்து)
மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி
என் மார்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி
ஹே ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி
எஸ்கிமோக்கள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா
காமராஜன் உதட்டில் அட கிஸ் என்ன புதுசா
அட கிஸ் என்றால் உதடுகள் பிரியும்
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு...(பத்து)
உள்ளாடும் உணர்ச்சி தீயாக
ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக
ஹா_தண்ணீரில் விழுந்த நிழல் போலே
நான் நனையாமல் இருந்தேன் நானாக
தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்தக்காரி..
நெஞ்சில் விதைத்தேன் முதல் நாள் உனையே
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீவே..(பத்து)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.