ஜானகி தேவி ராமனைத் தேடி பாடல் வரிகள்

Movie Name
Samsaram Adhu Minsaram (1986) (சம்சாரம் அது மின்சாரம்)
Music
Shankar-Ganesh
Year
1986
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்..Iஜானகி)

சீதை வணங்கி எழுந்தாளே..
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே..
ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே...(ஜானகி)

ராமன் சீதை முகம் பார்க்க..
சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட..
நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து..(ஜானகி)

ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.