சம்சாரம் அது மின்சாரம் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Samsaram Adhu Minsaram (1986) (சம்சாரம் அது மின்சாரம்)
Music
Shankar-Ganesh
Year
1986
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாருமில்லை
எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம்

பந்தமில்லை பாசமில்லை
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித் தொட்டா
ஷாக் அடிக்கிற மின்சாரம் (சம்சாரம்)

அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத்தானடி
பாறாங்கல்ல பெத்துபுட்டா பாசம் ஏதடி
பெத்தப்புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா

வாயக்கட்டி வளத்த புள்ள
மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கித் தந்த காசுக்கெல்லாம்
வட்டிக்கட்ட சொல்லுதடி
கோடு ஒண்ணு கிழிக்க வச்சி
கும்மி அடிக்குது அம்மாடி...(சம்சாரம்)

காலில் ஒரு முள்ளு தச்சா கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது
சேவல் அன்று கோடு கிழிச்சி வேலி போட்டது
வேலி தாண்டி கோழி போக வேளை வந்தது

அக்கம்பக்கம் யாருமில்லை ஆபத்துக்கு பாவமில்லை
பாவத்துக்கு சட்டம் இல்ல மீறுவது குத்தம் இல்ல
பாசத்துக்கு ரக்க மொளச்சு பறந்து போகுது தன்னாலே
சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்

அன்புக் கொள்ள ஆளுமுண்டு
நெஞ்சுக்குள்ளே ஈரமுண்டு சம்சாரம்
பந்தமுண்டு பாசமுண்டு
சொந்தத்துக்கு உள்ளம் உண்டு சம்சாரம்
சூட்சுமத்தை தெரிஞ்சிகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்.....

வயசு வந்த புள்ள ஒண்ணு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது
கணவர் இங்கே பிள்ளை என்றே கண்டு கொண்டது

தன்னடக்கம் வேணுமம்மா பெண்ணுகது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா
சம்சாரம் அது மின்சாரம்.....

இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய் திறந்தது சொல்ல வந்தா வார்த்த வரல
வானவில்ல சின்னப்புள்ள வளைக்க பாக்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது

சிறகொண்ணு மொளைக்கு முன்னே பறக்குது பட்டாம்பூச்சி
காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி
ஆத்துமேட்டில் எழுதி வச்சத அலை அடிச்சுது அண்ணாச்சி..
சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.