அழகிய அண்ணி அனுபவம் எண்ணி பாடல் வரிகள்

Movie Name
Samsaram Adhu Minsaram (1986) (சம்சாரம் அது மின்சாரம்)
Music
Shankar-Ganesh
Year
1986
Singers
P. Jayachandran, P. Susheela
Lyrics
Vairamuthu

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
ரகசிய பேச்சு அம்பலமாச்சு
அதை எண்ணி தவித்தாளே
குவா குவா குவா குவா...(அழகிய)

ஊருக்கு தந்தி அடிங்க
டாக்டர்க்கும் சொல்லி விடுங்க
மனம் விட்டு சிரிக்கின்ற மானே இனி
வயிற்றுக்கு வளர் பிறைதானே

இருவரும் பேசவில்லையே
இதுவரை ஓசையில்லையே
அக்காளும் போட்டாளே தாப்பா
அதை பாராட்ட உண்டாச்சு பாப்பா
குவா குவா குவா குவா....(அழகிய)

மாங்காயும் இனிக்குமடி
சாம்பலும்தான் ருசிக்குமடி
மசக்கையின் காரணம் யாரு அந்த
மாமனும் முழிப்பதைப் பாரு

அனுபவம் கத்து வைக்கணும்
அதுக்கு நீ ஒத்துழைக்கணும் அந்த
அனுபவம் கத்து வைக்கணும்
அதுக்கு நீ ஒத்துழைக்கணும்

மாட்டேன்னு சொன்னேன்னா போங்க
இப்ப வந்தீங்க மானத்த வாங்க
குவா குவா குவா குவா
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.