மண்ணின் மேல் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Ra.One (2011) (ரா.ஒன்)
Music
Vishal-Shekhar
Year
2011
Singers
Chinmayi
Lyrics
Vairamuthu
என் உயிர்
என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ

கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ
உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று
விழுந்தது என்ன
மலைதான் கொண்ட
அருவிகள் ரெண்டும்
அழுவதுமென்ன
(மண்ணில்)

When you go when you leave
Then you take a little piece of me with you
There's a hole in my soul
Cause you take a little piece of me with you (x2)

உன் கண்ணில் தானே
நான் பார்த்துக்கொண்டேன்
கண்ணே போனால்
நான் என்ன காண்பேன்
உன் செவியில் தானே
நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால்
யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை
கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா
ஓ நீ வா
(மண்ணின் மேல்)


நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்
இலையோடு வழியும்
மழைநீரைப்போல உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிபோவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்
(மண்ணின் மேல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.