ஊர தெரிஞ்சுகிட்டேன் பாடல் வரிகள்

Movie Name
Samsaram Adhu Minsaram (1986) (சம்சாரம் அது மின்சாரம்)
Music
Shankar-Ganesh
Year
1986
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu

ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன்
பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி (ஊர)

ஆத்தா அப்பன் பேச்சு காத்தில் அது போச்சு
பேச்ச மீறி போச்சு இனி வாழா வெட்டி ஆச்சு
காட்டுக்கு நடு காட்டுக்கு அன்று சீதை அவ போனா
ரோட்டுக்கு நடுரோட்டுக்கு இன்று பேதை இவ போனா

என் வீட்டு செல்லக்கட்டி என்னோட மல்லுக்கட்டி
என் கோட்ட தாண்டுதடி கண்ணம்மா என் கண்ணம்மா
என் இடுப்பு வேட்டி கூட என் பேச்ச கேட்கவில்லை
கண்ணம்மா என் கண்ணம்மா.....(ஊர)

ஏண்டி இந்த பாடு நீயும் கொஞ்சம் போடு
சூடு பட்ட நெஞ்சம் தண்ணி விட்டு ஆத்து
என் மகன் ஒரு பாலகன் இவன் படிப்பே தகராறு
பிள்ளையும் என் பேரனும் ஒரு வகுப்பில் படிப்பாரோ

அழுகின்ற என்னைக்கண்டு அடங்காத பிள்ளையொன்று
கடங்காரா என்றதடி கண்ணம்மா என் கண்ணம்மா
என் பேரு அம்மை அப்பன் எனக்கில்லை வெள்ளையப்பன்
கண்ணம்மா என் கண்ணம்மா....(ஊர)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.