அகிலா அகிலா கண் பாடல் வரிகள்

Movie Name
Nerukku Ner (1997) (நேருக்கு நேர்)
Music
Deva
Year
1997
Singers
Srinivas
Lyrics
Vairamuthu
அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

உன் தோட்டத்தில் பூ நனையுமென்றுதான்
குடை கொண்டு வருகிறேன்
உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்
காதல் பித்து ஏதேதோ பண்ணும்
மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்
காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்
ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலாநான்
உன்னையே 'டீ' போட்டுப் பேசினால்
உரிமை கூடும் அல்லவா
நான் உன்னையே 'டா' போட்டுப் பேசினால்
உறவு கூடும் அல்லவா
நீயே இங்கே நானாகிப் போனேன்
வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்
காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை
ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.