அவள் வருவாளா பாடல் வரிகள்

Movie Name
Nerukku Ner (1997) (நேருக்கு நேர்)
Music
Deva
Year
1997
Singers
Hariharan
Lyrics
Vairamuthu
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.