Katti Karumbe Lyrics
கட்டிக் கரும்பே கண்ணா பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ
ஆரி ஆராரிரோ......
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை (கட்டி)
ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ
ஊமைக்கு சொந்தம் யார் யாரோ
பூ வைத்த நெஞ்சில் தீ வைத்ததாரோ
உண்மையை சொல்ல வாராரோ
காளைக்குத்தானே வீராப்பு
கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு
கன்றோடு பசு இன்று திண்டாடுது
கட்டிக் கரும்பே கண்ணா.....
சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது
சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால் கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது
கண்ணுக்குள் வெல்லம் இப்போது நாம்
கரை சேரும் காலம் எப்போது உன்
தாய்ப்பாலில் கண்ணீரை யார் சேர்த்தது
கட்டிக் கரும்பே கண்ணா.....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.