விஸ்வரூபம் பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Vishwaroopam (2013) (விஸ்வரூபம்)
Music
Shankar-Ehsaan-Loy
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
யேவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை

யேவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)

விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே
விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
(விஸ்வல்லா...ஹூ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.