சகியே நீ தான் பாடல் வரிகள்

Movie Name
Anthimanthaarai (1996) (அந்திமந்தாரை)
Music
A. R. Rahman
Year
1996
Singers
P. Unnikrishnan
Lyrics
Vairamuthu
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால் அகல் தான் ஒளியே
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..

பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை..
பூவுக்கும் காற்றுக்கும் வாதங்கள் இல்லை…
நான்கு கண்கள் கலந்த பின்னாலே..
நால்வகை வேதங்கள் தடுப்பதும் இல்லை..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

பூமியை கேட்டா வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்..
பூமியை கேட்டா வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்.
வீதியை கேட்டா தென்றலும் வீசும்..
சாமியை கேட்டா காதலும் தோன்றும்..

சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

காதலின் ராஜ்யத்தில் விசித்திர வழக்கம்
கண்களை வாங்கி கொண்டு இதயத்தை கொடுக்கும்..
ஒருவிழி பார்வை உயிரையும் எடுக்கும்
மறுவிழி பார்வை உயிரையும் கொடுக்கும்..
இருவிரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும்…
இதயங்கள் தீண்டினால் எது நம்மை பிரிக்கும்?

சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால் அகல் தான் ஒளியே
சகியே நீ தான் துணையே..
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.