பட பட பட்டாம்பூச்சி பாடல் வரிகள்

Movie Name
Majunu (2001) (மஜ்னு)
Music
Harris Jayaraj
Year
2001
Singers
Shankar Mahadevan
Lyrics
Vairamuthu
பட பட பட்டாம்பூச்சி
படக் படக்குது தட தட ரயில்
ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என்
நெஞ்சுக்குள்ள என்ன
செஞ்ச நீ என்ன செஞ்ச

என்ன செஞ்சேன்
கேளடி புள்ள …என்ன
செஞ்சேன் கேளடி புள்ள
கையால் உன்ன தீண்டவும்
இல்ல கற்பு கோடும்
தாண்டவும் இல்ல சண்டக்கார
மயிலே நானும் கெண்டகாலும்
பாா்த்ததும் இல்ல கும்பக்கரை
அருவியில் நீயும் கொடஞ்சு
கொடஞ்சு ஆடி முடிச்சி
சொட்ட சொட்ட கரை வரும்
போது கிட்ட கிட்ட அருகில
வந்து சொட்டும் துளியில்
ஒரு துளி கேட்டேன்

………………………..

பட பட பட்டாம்பூச்சி
படக் படக்குது தட தட ரயில்
ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என்
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள
என்ன செஞ்ச நீ என்ன
செஞ்ச

………………………..

கடமுடா கடமுடா
குடம் ஒன்னு மனசுக்குள்
உருளுமே பூன வந்து
உருட்டவுமில்லை காற்று
வந்து தொறக்கவும் இல்ல
இந்த சத்தம் ஏன் கேட்குதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ

உனது மனசுக்குள்ள
பெண்ணே நான் புகுந்து புகுந்து
கொண்டேன் முன்னே நீ புரண்டு
படுக்கையிலே பெண்ணே நான்
உருண்டு விழுந்து விட்டேன்
கண்ணே

காயம் உண்டாச்சோ
தேகம் புண்ணாச்சோ

மருந்து போனடி
சிட்டுக்குருவியின்
முந்தானை முன்னேற்ற
கழகத்தின் தலைவி

ஆ பட பட பட்டாம்பூச்சி
படக் படக்குது தட தட ரயில்
ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள உன்
நெஞ்சுக்குள்ள என்ன
செஞ்சேன் நான் என்ன
செஞ்சேன் என்ன செஞ்சேன்
………………..என்ன செஞ்சேன்
……………. நான் என்ன
செஞ்சேன்

ஓ ………………….

ஓஹோ சட சட
சட சட மழை துளி மழை
துளி சிதறுது மழை கொட்டும்
கார்த்திகை மாசம் குளிர் காற்று
நரம்புக்குள் வீசும் எந்த வீதம்
குளிர் மாற்றுவாய் என்ன செய்து
வெப்பம் கூட்டுவாய் என்ன செய்து
வெப்பம் கூட்டுவாய்

அடுப்பு மூட்டுவதும்
இல்லை நான் நெருப்பு
மூட்டுவதும் இல்லை என்
மூச்சு மூட்டிவிடும் வெப்பம்
அந்த தீயில் இருப்பதுவும்
இல்லை

ஏக சந்தோசம் ஏக
சந்தோசம் சுகத்தின் சூத்திரம்
சொல்லி தருவான் சுடிதார்
முன்னேற்ற கழகத்தின்
தலைவா

பட பட பட்டாம்பூச்சி
படக் படக்குது தட தட ரயில்
ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என்
நெஞ்சுக்குள்ள என்ன
செஞ்ச நீ என்ன செஞ்ச

என்ன செஞ்சேன்
கேளடி புள்ள …என்ன
செஞ்சேன் கேளடி புள்ள
கையால் உன்ன தீண்டவும்
இல்ல கற்பு கோடும்
தாண்டவும் இல்ல சண்டக்கார
மயிலே நானும் கெண்டகாலும்
பாா்த்ததும் இல்ல கும்பக்கரை
அருவியில் நீயும் கொடஞ்சு
கொடஞ்சு ஆடி முடிச்சி
சொட்ட சொட்ட கரை வரும்
போது கிட்ட கிட்ட அருகில
வந்து சொட்டும் துளியில்
ஒரு துளி கேட்டேன்

……………………..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.