கருவறை கருவறை பாடல் வரிகள்

Movie Name
Thambi Vettothi Sundaram (2011) (தம்பி வெட்டோத்தி சுந்தரம்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Palakkad Sriram
Lyrics
Vairamuthu
கருவறை கருவறை தொடங்குமிடம்..
கல்லறை கல்லறை அடங்குமிடம்..
ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம்
அவனவன் வசதிக்கு தங்குமிடம்
இதில் கொட்டை போட்டவன் கோட்டை ஆகலாம்
பட்டை போட்டவன் பரமன் ஆகலாம்
போரிகியும் ஒரு நாள் புத்தனாகலாம்.. புத்தி மாறலாம்..
தர்மம் நாளைக்கு தப்பு ஆகலாம்
தப்பு என்பதே தர்மம் ஆகலாம்
உறவு மாற்றமே ஒழுக்கம் ஆகலாம்.. உலகம் மாறலாம்
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்..

மண் புழுவோ மண் புழுவோ மண்ணை திங்குது..
அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவத் தவள திங்குது..
புழுவத் தின்னும் தவளையதான் பாம்பு திங்குது..
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது..
பம்பத் தின்னும் கழுகதானே நரியும் திங்குது..
அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுஷன் திங்குறான்..
அந்த மனுஷன்தான் கடைசியிலே மண்ணு திங்குது..
அந்த மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது..
மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது..
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

கருவறை கருவறை தொடங்குமிடம்..
கல்லறை கல்லறை அடங்குமிடம்..

இன்பம் தேடி இன்பம் தேடி மனசு அலையுது..
அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் தும்பம் ஆகுது..
கர்வம் சேர்ந்து மனுஷன் வாழ்வில் கரை பிடிக்குது..
காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு தொவச்சு குடுக்குது..
காதல் பாசம் குடும்பம் எல்லாம் கால சுத்துது..
அது பறிச்ச எழுத வெச்ச பிறகே பாடம் சொல்லுது..
எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது..
சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது..
சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது..
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.