செங்காடே சிறுகரடே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Paradesi (2013) (பரதேசி)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுசக்கூட்டம் வெளியேறுதே

பொட்ட கள்ளியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துத்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா

வெளையாத காட்ட விட்டு விளையாண்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெயிலில் ஜனம் வெளியேறுதே ஓ...
வாழ்வோடு கொண்டுவிடுமே சாவோடு கொண்டுவிடுமே
போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பொல்லாத விதியும் அழைக்க போறோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது?

பாளம் பாளமாய் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்கப் பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா

காலோடு சரள கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடுங் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா? வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது
(பொட்ட கள்ளியும் )

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுசக் கூட்டம் வெளியேறுதே
(பொட்ட கள்ளியும் )

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.