முதல்வனே வனே பாடல் வரிகள்

Movie Name
Mudhalvan (1999) (முதல்வன்)
Music
A. R. Rahman
Year
1999
Singers
S. Janaki, Shankar Mahadevan
Lyrics
Vairamuthu
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே...

முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா...முதல்வா...முதல்வா

முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே...

ஆ...கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்
ஆ...பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மடி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே...மன்னனே இதோ இவள் உனக்கு

முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

(முதல்வனே)

பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா
ஓ...ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா
ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே...வேந்தனே உந்தன் வரம் வருமோ

முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஹே...காதல் பஞ்சம் வந்து...நொந்தாயோ...முத்த நிவாரணம்...உனக்களிப்போம்
வாளின் ஓசை...தீரும்போது...வளையல் ஓசை...கேட்க வரவோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.