மொட்டு விட்டதா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Pavithra (1994) (பவித்ரா)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Swarnalatha
Lyrics
Vairamuthu
இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல
இடியின் பறி பாசை

இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல
உயிர் துடிக்கும் ஓசை

மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா

முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா

இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர

ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே விடிய விடிய
நிலவு நனைய

மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா

முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா

தரையில் நிலா நிலா
வந்து காயுதே

நீ விரல் கொண்டு தீண்டு
வெண்ணிலவு தேயாதே

பருவம் இதோ இதோ
சுமை ஆகுதே

நீ பஞ்சு மெத்தை போட்டு
பங்கு பெறக் கூடாதா

விரகமே வருகுதே
வழிய வழிய அழகு உருகுதே

ரத்தத்தில் பரவசம்
பெருகுதே

இளமை இளமை உனது உரிமை
இன்று வேறு புதிய கிழமை

மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா

முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா

இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர

ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய

இது இதயத்தின் ஓசை ஓசை ஓசை

இளமை ஒரே முறை
இசை பாடுது

அது துள்ளி வரும் நேரம்
தூங்கி விடக் கூடாது

மலர்கள் இதோ இதோ
மலர்ந்தாடுது

நாம் சூடி விட வேண்டும்
வாடி விடக் கூடாது

அழகனே எழுதவா எனது மனத்தில்
உனது கவிதைகள்

முத்தத்தில் பழ ரசம் பருக வா
உடலும் உடலும் உருக உருக
உயிரும் உயிரும் உரச உரச

மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா

முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா

இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர

ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.