கொலைகாரா அனலாச்சு பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Thambi Vettothi Sundaram (2011) (தம்பி வெட்டோத்தி சுந்தரம்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Kalyani, Karthik
Lyrics
Vairamuthu
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. அழகே நீராட்டு..

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..

பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே..
எச்சி முத்தம் எல்லாம நெஞ்ஜாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காணாம
காமன் செய்யும் நாட்டாமை..
பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்திவெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல..

கொலைகாரி..

நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கர எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்
பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வெச்சிப் பொம்பளைக்கு அஞ்சுநாலா தூக்கமில்லை
மீச வெச்ச ஆம்பளைக்கு மெத்த வாங்க நேரமில்லை..

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. என் அழக நீராட்டு..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.