கண்ணா கண்ணா நான் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Varam (1989) (வரம்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
Mano
Lyrics
Vairamuthu
ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா

குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா

ஆண் : பள்ளிக்கூடம் போரடிக்கும்
புத்தி கெட்டுப் போக வைக்கும்
ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்
நாளை நல்ல நாள் பிறக்கும்
ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்
நாளை நல்ல நாள் பிறக்கும்

ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா

காப்பியடிக்க நீயும் கத்துக்க
காசு கொடுத்து பாஸூ பண்ணிக்க
வேணான்டா படிக்காதே
உன்னை வீணாக கெடுத்துக்காதே

சந்தைக் கடையில் மார்க்கு விக்குது
லஞ்சம் கொடுக்க க்யூவில் நிக்குது
பொய்யின்னு நினைக்காதே
பொய்யின்னு நினைக்காதே

அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம
இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு
அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம
இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு

இது ஊரெல்லாம் நாடெல்லாம் நாறிப்போச்சு
அட எப்போதும் போய் இந்த நம்ம பேச்சு

ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா

குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா

ஆண் : நாட்டிலெதுக்கு கட்சி இத்தனை
ரோட்டில் எதுக்கு கொடிகள் இத்தனை
எல்லாமே பொழப்பாச்சு
பொதுத் தொண்டெல்லாம் வெறும் பேச்சு

காசுப் பணத்த வாரிக் கொட்டவும்
ஊரு நிலத்தில் வீடு கட்டவும்
லைசென்சே கட்சிதான்டா
இப்ப நாடெல்லாம் கொள்ளை தான்டா

இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது
இது நாய் வாலு எப்போதும் நிமிராது
இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது
இது நாய் வாலு எப்போதும் நிமிராது

இந்த ஊரோடு சேர்ந்து நீ வேஷம் போடு
நீ முன்னேற பொய்யாக கோஷம் போடு

ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா

குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.