தொடு தொடு எனவே வானவில் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Thulladha Manamum Thullum (1999) (துள்ளாத மனமும் துள்ளும்)
Music
S. A. Rajkumar
Year
1999
Singers
Hariharan, K. S. Chithra
Lyrics
Vairamuthu
தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடுவெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.