நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Varam (1989) (வரம்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
K. S. Chitra
Lyrics
Pulamaipithan
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு
என்ன ராகமின்னு விளங்கவில்லை

மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு
எடுத்தெறிய இங்கு நேரமில்லை
மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு
எடுத்தெறிய இங்கு நேரமில்லை

நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை

அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை
கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு
அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை
கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு

இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு
இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன்
இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது
பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன்

நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை

நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்
அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்
நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன்
அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்

இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும்
மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா
வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம்
இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா

நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு
என்ன ராகமின்னு விளங்கவில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.