ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
En Swasa Kaatre (1999) (என் சுவாச காற்றே)
Music
A. R. Rahman
Year
1999
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே (4)
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே (2)


சின்னமுள்ளு காதலியல்லோ பெரியமுள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தர சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய்ப் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய்ப் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம்

(ஜும்பலக்கா)


முன்கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பில் ஆனாய்ப் பெண்ணே
உண்டுன்னா உண்டுன்னு ஒத்தச் சொல்லு சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒண்ணு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றித் தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்துக் கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கறைதேடி அலைகின்ற பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன

(ஜும்பலக்கா)


பேசிப்பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறணும்
காதல் எல்லாம் மேகம் போல தன்னலே உண்டாகணும்
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலைவைத்து அண்ணாந்து முகம் பார்த்து லவ் பிச்சைக் கேட்டுப்பாரு


(ஜும்பலக்கா)

(சின்ன முள்ளு)

(ஜும்பலக்கா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.