பூவாசம் புறப்படும் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Anbe Sivam (2003) (அன்பே சிவம்)
Music
Vidyasagar
Year
2003
Singers
Sadhana Sargam, Vijay Prakash
Lyrics
Vairamuthu
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
(பூவாசம்..)

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
(பூவாசம்..)

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா... 
(பூவாசம்..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.