தல போல வருமா பாடல் வரிகள்

Movie Name
Asal (2010) (அசல்)
Music
Bharathwaj
Year
2010
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
பெண்: காற்றை நிறுத்திக் கேளு
கனலை அழைத்துக் கேளு
அவன்தான்.... அசல் என்று சொல்லும்....
பழமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா தலபோல வருமா

குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...

(இசை...)

பெண்: காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தருள்வான்
போனான் என்று ஊர்பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவர்களையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா... மந்திரமா....
குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா.

(இசை...)

பெண்: நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் எச்சில் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முதுவதும் வெட்கம்
காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின்... வேலிகளை... சட்டென்று தாண்டுவான்...
தர்மங்களின்... கோடுகளை... தாண்டிட கூசுவான்...
மாயமா.... மந்திரமா....

குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.