ஓரு முறை எந்தன் பாடல் வரிகள்

Movie Name
Aasai (1995) (ஆசை)
Music
Deva
Year
1995
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

***

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

பெண்குழு : என்ன

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்குழு : என்ன

ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே

பெண்குழு : என்ன

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

ஆண்குழு : என்ன

ஆண் : ஓஹோ... ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை

பெண் : ஓஹோ... ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா


***

ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்

பெண்குழு : இல்லை

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்குழு : இல்லை

ஆண் : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்குழு : இல்லை

பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்

ஆண்குழு : இல்லை

ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன

பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

{ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.