புல்வெளி புல்வெளி பாடல் வரிகள்

Movie Name
Aasai (1995) (ஆசை)
Music
Deva
Year
1995
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்ரு
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?

(புல்வெளி)

 சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒலிக்கின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

துல்துல்துல் துல்துல்துல்லென துல்லும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ர தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெல்லை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பரக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திரந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கல்

(புல்வெளி)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.