காதல் கடிதம் பாடல் வரிகள்

Movie Name
Jodi (1999) (ஜோடி)
Music
A. R. Rahman
Year
1999
Singers
S. Janaki, Unni Menon
Lyrics
Vairamuthu
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ம்ம்ம்....ஒ.....ஓ.....ஓ
லளலளலளா......லளலளலளா.....லளலளலளலலலலலளா.......
ம்ம்ம்....
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
ஓ..இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்....

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்...
ஓ.....வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்.....

ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா..ஆ...

ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா

ல ல லல… ல ல ல ல ல

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

லல… ல ல ல லல… ல

ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.