ஒரு பொண்ணு ஒன்னு பாடல் வரிகள்

Movie Name
Kushi (2000) (குஷி)
Music
Deva
Year
2000
Singers
Anuradha Sriram, Hariharan
Lyrics
Vairamuthu
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்

ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்

ஹையயொ ஹையயொ ஹையயொ

பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு

ஒரு ஆணு ஒன்னு நான் பாத்தேன்
கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்
அவன் பார்த்த பார்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிருச்சே

ஹையயொ ஹையயொ ஹையயொ

பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு

லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ

தாய் தந்தை முகமே மறந்து
நெஞ்சில் உந்தன் முகம் எழுதே
பரீட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே

குளிக்கும் அறையில் ஒரு கூத்து
நினைக்கும் போது வெட்கம் வருதே
ஆடையில்லாமல் வந்தேன்
சோப்பு நுரைய அணிந்தேன்

ஒரு கொசு கடித்தாலும் உயிர் துடிக்கும்
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்

இன்று தேள் கடித்தாலும் தெரிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்
பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு

கண்ண விழிசிருக்க கனவுகள் வருது
கண்ண மூடி கிடந்தும் காட்சிகள் வருது
இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு

இது ஏன் என்று தெரியவில்லை
இது நீதானா புரியவில்லை
ஓரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை

ஹையொ ஹையொ ஹையொ ஹையையொ…

ஜாமத்து சந்திரன் வந்து
ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்
தென்றலை நான் துனைக்கழைத்தால்
தீயை வாரி எரைக்கும்

நவம்பர் மாதத்து மழையில்
நாக்கு வரண்டு கொஞ்சம் துடிக்கும்
எச்சிலை விழுங்கும் பொழுது
வரண்டு தொண்டை வலிக்கும்

அட பெண்களை பார்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்

அட ஆண்களை பார்த்தால் எரிச்சல் வரும்
என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும்
பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு

இடி விழும் ஓசை கேப்பதும் இல்லை
இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு

லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ

ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்

அவன் பார்த்த பார்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிருச்சே

அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.