தீயில் விழுந்த தேனா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Varalaru (2006) (வரலாறு)
Music
A. R. Rahman
Year
2006
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி
தனயன் அழுவானோ
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானாதங்கம் போலே இருந்தவள் தான்
சருகை போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியை போலே ஆவானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
நீ சுமந்த பிள்ளையாய்
நான் இருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய்
நீ ஆனாய்….அம்மா

எனக்கேதும் ஆனதுனா
உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கேதும் ஆனதுனா
எனக்கு வேறு தாய் இருக்காநெஞ்சை ஊட்டி வளர்த்தவளை
கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் விட்டு விடுவானா
மனதில் மட்டும் சுமப்பானா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

தாயின் மடி தானே
உலகம் தொடங்குமிடம்
தாயின் காலடியே
உலகம் முடியுமிடம்
உயிரை தந்தவளின்
உயிரை காப்பானா
கடனை தீர்ப்பானாகருணை தாயின் நினைவினிலே
கல்லும் கொஞ்சம் அழுது விடும்
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே
கண்ணின் மணியும் விழுந்துவிடும்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா

இல்லை தாயுமானவனா
இல்லை தாயுமானவனா 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.