தாஜ்மகால் தேவையில்லை பாடல் வரிகள்

Movie Name
Amaravathi (1993) (அமராவதி)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki, S. P. Balasubramaniam, Vairamuthu
Lyrics
Vairamuthu
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..

பெண் : காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ

பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை,

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

***

ஆண் : பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ, பூலோகம் தாண்டி வாழலாம்.

பெண் : ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே, ஆகாயம் தாண்டி வாழலாம்..

ஆண் : கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே

பெண் : கறை மாற்றி நாமும் மெல்ல, கரையேற வேண்டுமே

ஆண் : நாளை வரும், காலம் நம்மை, கொண்டாடுமே...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை,

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

***

பெண் : சில்வண்டு என்பது, சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா

ஆண் : வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல் கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா

பெண் : வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே

ஆண் : வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே

பெண் : வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...

ஆண் : தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..

பெண் : காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ

பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.