என்னை பந்தாட பாடல் வரிகள்

Movie Name
Ullam Ketkumae (2005) (உள்ளம் கேட்குமே)
Music
Harris Jayaraj
Year
2005
Singers
Srinivas
Lyrics
Vairamuthu
என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே

உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ

(என்னை பந்தாட …)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்ன இன்ன தென்று
செயற்கை கோள் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்ன தென்ன தென்று
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லு
அந்த பிரம்மன் வைத்த முற்று புள்ளி
செங்குயிலே … சிறு வெயிலே …
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே

இனியவனே இளையவனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே … என்னவனே …
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்

என்னை கொண்டாட பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் நுழைந்தவனே
உயிரை கண் கொண்டு கடைந்தவனே
உன்னை கண்டபின் இந்த மண்ணை நேசித்தேன் காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ அன்பே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.