நான் பேனா நீ பேப்பர் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Panchatanthiram (2002) (பஞ்ச தந்திரம்)
Music
Deva
Year
2002
Singers
Devan, Mathangi
Lyrics
Vairamuthu
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகல் என்ன
கதை முடிக்காமல் போவேனா

நான் யார் நான் யார்
மாய மாய மாய மாய
மாய கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே…..(நான்)

 

தர்டி சிக்ஸ் ட்வன்டிஃபோர்
தர்டி சிக்ஸ் கொல்லுதே
ட்வன்டிஃபோர் கேரட்டில்
அங்கம் தான் மின்னுதே
மன்மத லீலை வென்றார் உண்டோ

ஆடைகள் நாணம் இரண்டையும் பிடித்து
அன்புள்ள பூவே என்னை நீ நிறுத்து
இந்திய கார்கள் இடப் பக்கம் போகும்
அமெரிக்க கார்கள் வலப் பக்கம் போகும்
இரண்டையும் ஓட்டிடத் தெரிந்தவன் நான்
உன்னையும் ஓஹோ அறிந்தவன் யான்
மன்மத லீலை வென்றார் உண்டோ

மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும்
பெண்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும்
வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வேர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன்
இந்தியன் யார் புரிய வைப்பேன்.....(நான்)

மன்மத லீலை வென்றார் உண்டோ
மன்மத லீலை வென்றார் உண்டோ
மன்மத லீலை வென்றார் உண்டோ......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.