சின்ன சின்ன பூவே ‍‍- சோகம் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Shankar Guru (1987) (சங்கர் குரு)
Music
Chandrabose
Year
1987
Singers
K. J. Yesudas
Lyrics
Vairamuthu

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க
அப்பாவ பாத்தாக்கா அழுதேன்னு சொல்லுங்க
தாய் வச்ச மையெல்லாம் கண்ணோடு கரைகிறதே
கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறதே

நீ முத்தம் தந்தால் கண்ணில் இன்று ரத்தம் வந்தது
நீ சொல்லி தந்த பாடல் மட்டும் நெஞ்சில் நின்றது
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

அப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
புயலோடு மழை வந்தா பூ மொட்டு தாளாது
ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சு தாங்காது
முள் மேலே தல வச்சு முல்லப்பூ தூங்காது

இவ ஆளில்லாம நூலில்லாம ஆடும் பட்டமா
நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் எட்டுமா
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்...
என் துன்பம் எல்லாம் தீரும்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.