ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்

Movie Name
Muthal Mariyathai (1985) (முதல் மரியாதை)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
S. Janaki
Lyrics
Vairamuthu
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

காதில நரைச்ச முடி கன்னத்தில் குத்துது குத்துது
சுழியில குடகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
விவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
ஒதுக்கி வச்சிருக்கேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு?
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள பேச்சு.

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.