காதலே நீ என்ன செய்தாயோ பாடல் வரிகள்

Movie Name
Rangeela (1995) (ரங்கீலா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
P. Unnikrishnan
Lyrics
Vairamuthu
காதலே நீ என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.

ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலா நீ என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.

பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

மண்ணுக்குள் உள்ள தெல்லாம்
கண்டு செல்லக் கூடவில்லை.

பெண்ணுக்குள் உள்ளதென்ன
தேடல் இன்னும் தீரவில்லை.

மன்மதன் உருவத்தை
யாரும் பார்க்கவில்லை.

மஞ்சத்தில் முழு உருவம்
மனித ஜாதி காணவில்லை.

பலகோடி மக்கள் வந்து
பருகித்தான் போன பின்னும்.

மாறுங் காதல் அமுதங்கள்
தீர்வதும் இல்லை.

காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலே என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

உள்ளத்தின் ஜன்னல் இன்று
ஓசையோடு தெரிந்ததென்ன.

சுகம் என்னும் ராஜ்ஜியத்தின்
ஒரு வட்டம் தெரிந்ததென்ன.

தள்ளி நின்ற மல்லி மொட்டு
மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன.

அள்ளி ஓடி நான் நிற்க்க
அதற்க்கு முன்னே குவிந்ததென்ன.

பெண்ணுரிமை பேசும் பெண்மை
பெரி புளலாய் பேசும் பெண்மை
கண்மூடி ஊமை போல
சாய்வதும் என்ன.

காதலே நீ என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.