தனியே தனியே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Rangeela (1995) (ரங்கீலா)
Music
A. R. Rahman
Year
1995
Singers
S. Janaki
Lyrics
Vairamuthu
தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்

உன் தந்தையும் தாயும் கொண்டால்
நீயே இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

இதி ஹாசம் எல்லாமே
காதல் தந்த மிச்சம்

கலை கவிதை எல்லாமே
காதல் என்னும் உச்சம்

காதல் என்னும் மூன்றெழுத்தில்
மூவுலகம் அடக்கம்

காதல் எங்கே தொடங்கியதோ
வாழ்க்கை அன்பு தொடக்கம்

ஊனோடு உயிர் வைத்தது
உறவாடத் தானே

ஆணோடு பெண் வைத்தது
அதற்க்காக தானே

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாளும
ஜீவிதம் இல்லையே

தனியாக ஜீனிக்கு
இனிப்பெண்பதில்லை

நாவோடு சேர்ந்தால் தான்
சுவை கொள்ளை கொள்ளை

கொடியோடு வாழ்வதிலே
பூவுக்கென்ன சிறப்பு

கூந்தலிலே சேர்வது தான்
பூவுக்கொரு மதிப்பு

இலையோடு பச்சை நிறம்
இழைத்தது யாரோ

என்னோடு உன்னைக் கொண்டு
இணைத்தது யாரோ

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாலும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.